பணிக்கு செல்வதா? பாருக்கு செல்வதா? மதுபிரியர்கள் ஆதங்கம்
பணிக்கு செல்வதா? பாருக்கு செல்வதா? மதுப்பிரியர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருகின்றன அந்த பதிவில் மதுப்பிரியர்கள் சிலர் கோரிக்கை வைத்து உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல ஒழுங்காக சென்றுவந்தோம்.
இரவு பணி முடிந்து திரும்பும்போது மதுக்கடைகளுக்கு சென்று தேவையான மதுவகைகளை வாங்கி வந்தோம். ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறப்பதால் பணிக்கு செல்வதா? பாருக்கு செல்வதா? என குழப்பம் எழுகிறது. மேலும் இரவு 9 மணிக்கு தான் பெரும்பாலானோருக்கு பணி முடிகிறது.
இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் ‘பிளாக்’கில் (கள்ளச்சந்தை) சரக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் அரசுக்கும் நிதி இழப்பீடு ஏற்படுகிறது. எனவே மதுபிரியர்களின் நலன் கருதி இதற்கு முன்பு இருந்தது போல டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story