ரூ.15 லட்சம் கடனை திருப்பிக்கேட்ட மருந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் - 3 பேர் மீது வழக்கு


ரூ.15 லட்சம் கடனை திருப்பிக்கேட்ட மருந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் - 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Nov 2021 5:34 PM IST (Updated: 26 Nov 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

ரூ.15 லட்சம் கடனை திருப்பிக்கேட்ட மருந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை, 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர், மருந்து மற்றும் மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கீழப்்பாக்கத்தைச்சேர்ந்த மருந்து வியாபாரி ஒருவர் ரூ.15 லட்சத்துக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பணத்தை திருப்பிக்கேட்டபோது, தன்னை கூலிப்படை மூலம் மிரட்டுவதாகவும், நேரில் பணத்தை கேட்கச்சென்றபோது தனது தந்தையையும் கூலிப்படை மூலம் மிரட்டப்பட்டதுடன், தந்தை அணிந்திருந்த மோதிரம், கைக்கெடிகாரம் மற்றும் ரூ.1,000 பணத்தை வழிப்பறி செய்து விட்டதாகவும், தமிழ்மணி கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story