கூடலூரில் மழையால் இடிந்து விழுந்த வீடு
கூடலூரில் மழையால் வீடு இடிந்து விழுந்தது.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக முதல் போக நெல் அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் கனமழை பெய்தது. இதில் கூடலூர் 18-வது வார்டு ஆசாரிமார் தெருவில் உள்ள அபுதாகீர் என்பவருக்கு சொந்தமான வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் வசிக்காததாலும், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை.
இதையடுத்து மேலக்கூடலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் இடிந்து விழுந்த வீட்டை நேற்று பார்வையிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story