சாயர்புரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்

சாயர்புரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்
x
தினத்தந்தி 26 Nov 2021 6:43 PM IST (Updated: 26 Nov 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்

சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள தேரிரோட்டில் தனியார் தும்பு கம்பெனி உள்ளது. இங்கு இடையர்காடு வடக்கு தெருவை சேர்ந்த சிவசக்திவேல் மகன் லிங்கதுரை(வயது 21) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 7 மணியளவில் அவர் கம்பெனியில் பழுதான பழைய மோட்டாரை பழுது பார்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story