நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடப்பட்டது


நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடப்பட்டது
x
தினத்தந்தி 26 Nov 2021 8:29 PM IST (Updated: 26 Nov 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு திருப்பதி, கோவை எக்ஸ்பிரஸ் ெரயில்கள், சரக்கு ெரயில் ஆகியவை வந்தன. இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு திருப்பதி, கோவை  எக்ஸ்பிரஸ் ெரயில்கள், சரக்கு ெரயில் ஆகியவை வந்தன. இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
ரெயில்வே கேட் மூடப்பட்டது
நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை  6.10 மணிக்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில், தஞ்சையில் இருந்து காலிப்பெட்டிகளுடன் சரக்கு ெரயில் ஆகியவை வந்தன. இதற்காக காலை 6.05 மணியளவில் ெரயில்வே கேட் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் நடைமேடையில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட்டது. பின்னர் 3-வது  நடைமேடையில் சரக்கு ெரயில் வந்து நின்றது. அப்போது பெட்டிகளை நிறுத்தி என்ஜின் மட்டும் திசைமாற்றப்பட்டு முதலாவது நடைமேடைக்கு வந்தது. அதனை தொடர்ந்து மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் நிலையத்திற்குள் வந்தது. அப்போது சரக்கு ெரயில் என்ஜின் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றது. 
போக்குவரத்து பாதிப்பு
கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு ரெயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து மூடப்பட்ட ரெயில்வேட் திறக்கப்பட்டது.  அப்போது சாலையில் அணிவகுத்து நின்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு அவதியடைந்தனர். 
இருவழிச்சாலை திட்டம் 
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை போக்க மாற்று வழித்திட்டங்களான மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலை திட்டம் ஆகிய பணிகளை துரிதப்படுத்த  வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story