தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 8 துணை கலெக்டர்களும், 8 தாசில்தார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 8 துணை கலெக்டர்களும், 8 தாசில்தார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 8 துணை கலெக்டர்களும், 8 தாசில்தார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த அதி கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி, வருவாய் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வெள்ள நிவாரண பணிகளை விரைவுபடுத்தி ஒருங்கிணைப்பு செய்வதற்காக துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் தொடர்பு அலுவலர்களாகவும், தாசில்தார்கள் உதவி தொடர்பு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்பு அலுவலர்கள்
அதன்படி மாநகராட்சி 1 முதல் 8 வார்டுகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா 9444484765, 9 முதல் 16 வார்டுகளுக்கு உதவி ஆணையர் (கலால்) பீ.செல்வநாயகம் 7010570841, 17 முதல் 24 வார்டுகளுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்புலட்சுமி 9445477847, 25 முதல் 32 வார்டுகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் என்.ருக்குமணி 9443102521, 33 முதல் 40 வார்டுகளுக்கு உதவி செயற்பொறியாளர் கே.செல்வம்9443713013, 41 முதல் 48 வார்டுகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கே.சண்முகத்தாய்-9842284361, 49 முதல் 56 வார்டுகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் எம்.லீமா ரோஸ் 9789710325, 57 முதல் 60 வார்டுகளுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.சசிரேகா9842946278 ஆகியோர் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இவர்களுக்கு உதவி செய்வதற்காக தாசில்தார்கள் செல்வபிரசாத், அழகர், தாமஸ் அருள் பயாஸ், நம்பிராயர், சுசிலா, நாக சுப்பிரமணியன், சிவகாம சுந்தரி, லொரைட்டா ஆகிய 8 பேரும் உதவி தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
துரித நடவடிக்கை
இந்த தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி தொடர்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் முகாமிட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
இதேபோன்று காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு தொடர்பு அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம் 9445000370 மற்றும் உதவி தொடர்பு அலுவலராக, இஸ்ரோ நிலம் எடுப்பு தனி தாசில்தார் ராஜீவ் தாகூர் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story