வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டு சிறை
ஊட்டி
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வாரிசு சான்றிதழ்
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வருவாய் ஆய்வாளராக தாண்டவ நடராஜன் பணிபுரிந்து வந்தார். அப்போது ஊட்டியை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவர் வாரிசு சான்றிதழ் பெற தாசில்தார் அலுவலத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அவரிடம் விண்ணப்பத்தை பெற்ற கிராம வருவாய் அலுவலர், ஆவணங்களை சரிபார்த்து வழங்க வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பினார். வாரிசு சான்றிதழ் வழங்க ஜான் பாஸ்கோவிடம் வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவநடராஜன் ரூ.500 லஞ்சம் கேட்டார்.
வருவாய் ஆய்வாளர் கைது
இதுகுறித்து ஜான் பாஸ்கோ நீலகிரி மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஜான் போஸ்கோவிடம் கொடுத்து, வருவாய் ஆய்வாளரிடம் வழங்குமாறு கூறினர்.
கடந்த 16.7.2007-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் தாண்டவ நடராஜனிடம் ஜான்பாஸ்கோ ரூ.500 பணத்தை லஞ்சமாக வழங்கினார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடா்பான வழக்கு ஊட்டியில் உள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
9 ஆண்டு சிறை
வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். அத்துடன் அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தாண்டவ நடராஜன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story