கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை


கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 26 Nov 2021 9:27 PM IST (Updated: 26 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நாகை தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்தவர் குணமூர்த்தி(வயது 36). கொத்தனாரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி வேளாங்கண்ணி கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தார். 
இதைப்பார்த்த குணமூர்த்தி, அந்த சிறுமியை கீழே தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணமூர்த்தியை கைது செய்தனர்.
கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் குணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.
மேலும் சிறுமியை பாலியல் தாக்குதல் செய்ததற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக 8 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குணமூர்த்தியை கடலூர் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
----
...

Next Story