இடைவிடாது பெய்யும் மழை


இடைவிடாது பெய்யும் மழை
x
தினத்தந்தி 26 Nov 2021 9:44 PM IST (Updated: 26 Nov 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இடைவிடாது பெய்யும் மழையால் மக்கள்அவதி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இடைவிடாது பெய்யும் மழையால் மக்கள்அவதி அடைந்துள்ளனர்.
ஆய்வு மையம்
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது அடைமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. 
விடிய விடிய கொட்டி தீர்த்த மழை நேற்று காலை சற்று நின்றது. இதன்பின்னர் மாலை முதல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை காரணமாக மாவட் டத்தில் தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் குண்டும் குழியமாக மாறிய நிலையில் அதில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்களும் அவதி அடைந்தனர்.
விடுமுறை
இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் மழையால் மாவட்டத்தில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் தவிர மீதம் உள்ள தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையை பொருட்படுத்தாது வயல் வெளிகளில் தங்கி கண்காணித்து வருகின்றனர்.
 மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதால் அவதி அடைந்துள்ளனர்.
மழைஅளவு
மாவட்டத்தில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு:- ராமநாதபுரம்-32, மண்டபம்-33.8, ராமேசுவரம்-38.2, பாம்பன்-28.7, தங்கச்சிமடம்-47.3, பள்ளமோர்குளம்-38, திருவாடானை-21.4, தொண்டி-31.8, தீர்த்தாண்டதானம்-47.7, வட்டாணம்-21.1, ஆர்.எஸ்.மங்கலம்-25, பரமக்குடி-66.7, முதுகுளத்தூர்-20, கமுதி-45.4, கடலாடி-22.2, வாலிநோக்கம்-15, சராசரி-33.39. இந்நிலையில் வங்க கடலை ஒட்டி உள்ள ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால் மாவட்டத்தில் மேலும் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Next Story