பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:58 PM IST (Updated: 26 Nov 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பெருமா னேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது45). அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான செல்லத்துரை மகன் பாலமுருகன் (45). இவர்கள் இருவரும் தொண்டியில் உள்ள நண்டு கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலை‌யில் சம்பவத் தன்று பாண்டி மனைவி, வள்ளி பாலமுருகனிடம் தனது கணவ ருடன் சண்டை போட வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் வள்ளியை தரக் குறைவாக பேசி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிசெயின், தங்க செயினை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக வள்ளி தொண்டி போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Next Story