விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தொ.மு.ச. மாவட்டக்குழு தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருத்தப்பட்ட வேளாண்சட்டங்களை வரும் கூட்டத்தொடர் முதல் நாளிலேயே திரும்பப்பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்து சட்டமாக்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசுப்போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, குழு தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ, மூர்த்தி, முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story