ஜோலார்பேட்டை வட்டார அளவில் 2 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
2 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் கூறியதாவது:-
ஜோலார்பேட்டை வட்டார அளவில் பொதுச் சுகாதார சட்டப்படி ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. ரேஷன்கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், டீக்கடைகள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், ஜவுளிக்கடைகள், கடை வீதிகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க், தனியார், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மீறுபவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது புதுப்பேட்டை சமுதாய சுகாதார நிலைய டாக்டர் பி.சுமதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story