மொபட் மீது லாரி மோதி ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பலி
மொபட் மீது லாரி மோதி ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பலி
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் சீனன் (வயது 73). சுகாதார துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மனைவி சாரதாம்பாளுடன் (65) தங்களுக்கு சொந்தமான நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சீனன் தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சாரதாம்பாள் படுகாயம் இறந்தார்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சாரதாம்பாளை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீனன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். சந்திரபுரம் பகுதியில் இயங்கி வரும் நார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story