மசாஜ் சென்டரில் சிறுமியை சீரழித்த மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் கைது
புதுச்சேரியில் மசாஜ் சென்டரில் சிறுமியை சீரழித்த வழக்கில் மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, நவ.
புதுச்சேரியில் மசாஜ் சென்டரில் சிறுமியை சீரழித்த வழக்கில் மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மசாஜ் சென்டரில் விபசாரம்
புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது உருளையன்பேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்பட 40 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மசாஜ் சென்டர் உரிமையாளர் சுனிதா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டையவர்களை மசாஜ் சென்டருக்கு பேசிய செல்போன் எண் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் 2 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக திருக்கோவிலூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஸ்ரீராம் (வயது 27), திண்டிவனத்தை சேர்ந்த மளிகை கடைக்காரர் சாதிக் பாட்ஷா (47) ஆகிய 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை சீரழித்த இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு வந்து சென்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story