மாட்டுவண்டியுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மாட்டுவண்டியுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 4:57 PM GMT (Updated: 26 Nov 2021 4:57 PM GMT)

மாட்டுவண்டியுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

வேலூர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் மாநில அரசை கண்டித்து மாட்டுவண்டிகளுடன் கிரீன்சர்க்கிள் பகுதியில் இருந்து ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையொட்டி அங்கு நேற்று இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கருணாகரன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்தநிலையில் அறிவித்தபடி பா.ஜ.க.வினர் ஊர்வலம் செல்ல அங்கு வந்தனர். இதற்காக பல மாட்டுவண்டிகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு மாட்டுவண்டியை மட்டும் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து அங்கேயே மாட்டுவண்டியை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் பாஸ்கர், துணை தலைவர் ஜெகன்நாதன், பொதுச்செயலாளர் பாபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Next Story