திண்டிவனம் அரசு பள்ளியில் லேப்டாப் டி வி திருடிய 3 வாலிபர்கள் கைது


திண்டிவனம் அரசு பள்ளியில்  லேப்டாப் டி வி திருடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 10:35 PM IST (Updated: 26 Nov 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அரசு பள்ளியில் லேப்டாப் டி வி திருடிய 3 வாலிபர்கள் கைது

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தாதாபுரம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் டி.வி. எடுத்து வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கீழ்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் லோகநாதன்(23), ரத்தினவேல் மகன் ராஜவேல்(20), புருஷாத்தமன் மகன் எட்டியப்பன்(எ)லாரன்ஸ்(22) என்பதும், இவர்கள் கீழ்மாவிலங்கை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையில் புகுந்து அங்கிருந்த லேப்-டாப், எல்.இ.டி.டிவி. ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 லேப்டாப், ஒரு எல்.இ.டி. டி.வி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story