காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து காங்கிரசார் மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர். இந்த பயணம் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் வந்தடைந்தது. பின்னர் அங்கு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் நகர தலைவர்கள் கனகவேல், சாம்பசிவம், எழிலரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், பாபு, முனிஅய்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், நீலன்.அசோகன், வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழக்குகளை திரும்ப பெற வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்துள்ள அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கென அரசின் சார்பில் விவசாயிகள் நல சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story