ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீர்


ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீர்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:45 PM IST (Updated: 26 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழை காரணமாக ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த 7 டன் அரிசி சேதமடைந்தது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்தது. இரவு முழுவதும் ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீர் வழிந்தோடாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் ரேஷன் கடையை திறந்து பார்த்தனர். 

அப்போது கடைக்குள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் சேதமடைந்த அரிசி, பருப்பு, கோதுமை மூட்டைகளை அப்புறப்படுத்திய ஊழியர்கள், தண்ணீரில் மூழ்காமல் இருந்த மூட்டைகளை மீட்டு மினிவேன் மூலம் கோவிந்தராஜ் நகரில் உள்ள மற்றொரு ரேஷன் கடைக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தினர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்ட போது, ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த 7 டன் அரிசி, 300 கிலோ பருப்பு, 550 கிலோ கோதுமை ஆகியவை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன என்றனர். 

Next Story