இலங்கை தமிழர்களுக்கு ரூ.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
பரமத்தியில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
பரமத்திவேலூர்:
நலத்திட்ட உதவிகள்
பரமத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 408 குடும்பங்களை சேர்ந்த 1,261 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ரூ.19 லட்சத்து 88 ஆயிரத்து 675 மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள், 13 குடும்பங்களுக்கு ரூ.47 ஆயிரத்து 411 மதிப்பில் விலையில்லா சமையல் கியாஸ் இணைப்பு ஆகியவற்றை வழங்கினார்.
ரூ.31 லட்சம்
மேலும் 9 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் உள்பட ரூ.31 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி தாசில்தார் சுந்தரவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story