ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்


ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்
x
தினத்தந்தி 26 Nov 2021 11:15 PM IST (Updated: 26 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் கூட்ரோடு பகுதியில் வனத்துறை ஊழியர் ஜோதி தனது வீட்டில் ஆடுகள், நாய்களை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் வளரும் நாய் ஒன்று, ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து வருகிறது. இந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் பரவியதால் அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 இது குறித்து ஜோதி கூறுகையில், ஆட்டுக்குட்டி ஈன்ற தாய் ஆட்டுக்கு பால் சுரக்கவில்லை. குறை மாதத்தில் குட்டி போட்டதால் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டுக்குட்டி கத்தும் போது நாய் பால் கொடுத்து வருகிறது என்றார்.

Next Story