மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சங்கர்மேஸ்திரி உள்பட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிம்புதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணன், பரசுராமன், தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story