தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 26 Nov 2021 11:40 PM IST (Updated: 26 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படுமா? 
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சிமெண்டு கட்டையிலான  பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டன. இதனால் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர்பந்தல் வரை சென்று மீண்டும் திரும்பி பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ் உள்பட பல்வேறு  வாகனங்கள் சென்று வந்தன. பின்னர் தேசிய நெடுஞ்சாலையில்  செங்குணம்  கைகாட்டி பாலத்தின்  உள்ளே  நுழைந்து சென்று வரும்படியாக  தற்கால பாதை வசதி ஏற்படுத்தித்தரப்பட்டிருந்தன. அதன்பின் செங்குணம் கைகாட்டி பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு உயர் கோபுர மின் விளக்கு  உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. ஆனால் வசதிகளை ஏற்படுத்திய பின்பும் நெடுஞ்சாலை செங்குணம் கைகாட்டி பிரிவில் அமைக்கப்பட்ட பேரிகார்டு அகற்றப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 குமார் அய்யாவு,  செங்குணம், பெரம்பலூர். 

வேகத்தடை அமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், ஈசநத்தம் மெயின் ரோட்டில் உள்ளது பொன்னகர் என்ற பகுதியில் சாலையில் வேகத்தடை இல்லாததால் இப்பகுதியாக செல்லும் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கிருஷ்ணன், பொன்னகர், கரூர். 

வடிகால் வசதி இன்றி மக்கள் அவதி 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சி ஆதிதிராவிட குடியிருப்பில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நாகுடி, புதுக்கோட்டை. 

இதேபோல் அரியலூர் மாவட்டம், ஆம்பூர் பஞ்சாயத்து விக்கிரமங்கலம் நடுத்தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விக்கிரமங்கலம், அரியலூர். 

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சாக்கடையை சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கி நிற்கிறது.  இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கீதா, புஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர்.

கூடுதல் பஸ் வசதி வேண்டும் 
பெரம்பலூரில் இருந்து சிறுகுடல், கீழப்புலியூர், எழுமூர், பெருமத்தூர் குடிக்காடு, வைத்தியநாதபுரம் வழியாக வேப்பூருக்கு கூடுதல் பஸ் வசதிகள் இல்லாததால் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வேப்பூர், பெரம்பலூர்.  

பள்ளி கட்டிடத்தை சூழ்ந்த மழைநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.  இதனால் பள்ளி கட்டிடம் பாதிக்கப்படுவதுடன் தேங்கி நிற்கும் மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை.

நோய் பரவும் அபாயம் 
புதுக்கோட்டை மாவட்டம் , புதுக்கோட்டை டவுன், மச்சுவாடி , சிவானந்தபுரம்  ஆகிய பகுதிகளில் குப்பைகளும், சாக்கடையும் ஒன்றாக கலந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நடராஜன், மச்சுவாடி, புதுக்கோட்டை.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி கலெக்டர் ஆபிஸ் ரோடு பெரிய மிளகுபாறை, ஒண்டிகருப்பசாமி கோவில் எதிர்புறம் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின் கம்பத்தின் அடிப்பகுதி பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரிய மிளகுபாறை, திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் 64-வது வார்டுக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் பெய்த மழைநீர் கழிவுநீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நீர் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருவெறும்பூர், திருச்சி. 
இதேபோல் திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஜே.கே.நகர் பகுதி மக்கள்   கொட்டப்பட்டு குளத்தின் நீர் சூழ்ந்து வெளியேற வழியில்லாமல் கடந்த சில நாட்களாக அவதிப்படுகின்றனர். தொடர்மழையால் கொட்டப்பட்டுகுளம் நிரம்பிய நிலையில், வடிகால் வசதிகள் மூடப்பட்டதால் மழை நீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜே.கே.நகர், திருச்சி. 

சாலையில் தேங்கிய சாக்கடைநீர் 
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூடடுறவு வங்கி செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக சாக்கடைநீர் தேங்கி உள்ளது. நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  சோமரசம்பேட்டை, திருச்சி. 

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 
திருச்சி மாவட்டம், கல்லக்குடி  ஏரிக்கரை சாலையில் உள்ள பெரியசாமி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கல்லக்குடி, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், 14-வது வார்டு  பூக்கொல்லை தெரு அருகே உள்ள இரட்டை வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. மேலும் இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 
இந்த குப்பைகள் வாய்க்காலில் அடைத்துள்ளதால் கழிவுநீரும், மழைநீரும் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சையது முஸ்தபா, பூக்கொல்லை, திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
திருச்சி மத்திய பஸ் நிலையம் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் செல்கிறது.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்லும், பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்வதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலை கடந்த 10 நாட்களாக நிலவுகிறது. இதுகுறித்து புகார்தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

பயன்பாட்டிற்கு வராத பூங்கா 
திருச்சி மாவட்டம்,  தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன் பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது. இது இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத காரணத்தாலும்,  அதிகாரிகள் கண்டுக்கொள்ளாத காரணத்தினாலும் இதில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கள் பல காணாமல் போய்விட்டது. பூங்கா பராமரிப்பு இன்றி தற்போது புற்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பூங்கா பொதுமக்கள் பயன்பாடு இன்றி வீணாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேய்க்கல் நாயக்கன்பட்டி, திருச்சி.

Next Story