கழுத்தளவு நீரில் நீந்தியபடி எடுத்து சென்று தண்ணீரிலேயே பிணத்தை புதைக்கும் அவலநிலை


கழுத்தளவு நீரில் நீந்தியபடி எடுத்து சென்று தண்ணீரிலேயே பிணத்தை புதைக்கும் அவலநிலை
x
தினத்தந்தி 26 Nov 2021 11:46 PM IST (Updated: 26 Nov 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீரிலேயே பிணத்தை புதைக்கும் அவலநிலை

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில்அரியபாடி ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதியில்  சுடுகாடு உள்ளது. 
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த ஊரில் இறந்த ஒருவரை அவரது உறவினர்கள் கழுத்தளவு தண்ணீரில் நீந்தியபடி தூக்கிச் சென்றனர். 

மேலும் பிணம் புதைக்க தோண்டிய பள்ளத்தில்  தண்ணீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை ெவளியேற்றியபோது ஊற்று பெருகி வந்தது. இதனால்  தண்ணீரிலேயே பிணத்தை புதைத்துவிட்டு சென்றனர். 

ஏற்கனவே விநாயகபுரம் சுடுகாட்டுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆரணி தாசில்தார் பெருமாள், விநாயகபுரம் சுடுகாடு பகுதியை பார்வையிட்டு, மாற்று இடம் வழங்க ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றித் தர வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தனர். 

இதனால் விநாயகபுரம் சுடுகாட் டுக்கு மாற்று இடத்துக்கு தீர்மானம் நிறைவேற்றித்தர அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story