ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி

துறையூர், நவ.27-
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் அதே கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்துக்கு கீழ்ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்றுபெருமாள்தோட்டத்தில் இருந்து கீழ்ஆற்றை கடந்து கிராமத்துக்கு வரும்போது, கீழ்ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்தது. இதில் பெருமாள் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து அப்பகுதியினர் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கீழ்ஆற்றில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story