கோவிலுக்கு சொந்தமான பழைய கட்டிடம் இடிந்தது
கோவிலுக்கு சொந்தமான பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது.
விராலிமலை
விராலிமலை சன்னதி தெருவில் முருகன் கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கட்டிடம் போதிய பராமரிப்பின்றி கிடந்ததால் சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து அருகே உள்ள கட்டிடத்தின் மீது விழுந்ததில் குடிநீர் குழாய் சேதமடைந்தது. மேலும் மீதமுள்ள சுவர்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும் இக்கட்டிடத்தின் அருகே மினி குடிநீர் தொட்டி இருப்பதாலும் தண்ணீர் பிடிக்க வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே, இந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகள் சேதம்
இதேபோல, விராலிமலை தாலுகா, கல்குடி கிராமம் தாளப்பட்டியை சேர்ந்த குஞ்சம்மாள் என்பவரின் ஓட்டு வீடும், வடுகப்பட்டி கிராமம் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவரின் ஓட்டு வீடும் தொடர் மழை காரணமாக இடிந்து சேதம் அடைந்தன. மேலும் அகரப்பட்டி கிராமம் கீழ இன்பம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் முத்து ஆகியோரின் ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.
Related Tags :
Next Story