விளை நிலங்களுக்குள் ஆற்றுநீர் புகுந்தது
விளை நிலங்களுக்குள் ஆற்றுநீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலையாளபட்டி கல்லாற்றில் ஓடிய தண்ணீர் கரையை கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. குறிப்பாக கல்லாற்றின் கரையோரம் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கருணை கிழங்கு, மரவள்ளி கிழங்கு, மஞ்சள், வெங்காயம், சம்பங்கி பூ போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன குழாய்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. மரவள்ளி கிழங்கு பயிர்கள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டது. கருணை, மஞ்சள், வெங்காயம், சம்பங்கி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி வயல் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாலுகா பகுதிகளில் பெரும்பாலான பருத்தி மற்றும் மக்காசோள வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முழுமையாக கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story