சரக்கு வேனை கடத்தியதாக தம்பதி உள்பட 3 பேர் கைது


சரக்கு வேனை கடத்தியதாக தம்பதி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2021 1:36 AM IST (Updated: 27 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வேனை கடத்தியதாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சகுந்தலா. இவருக்கு சொந்தமான சரக்கு வேனை சிலர் கடத்தி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பு, அவரது மனைவி அன்னபூரணி, மாமனார் குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர். சரக்கு வேனை மீட்டனர்.

Next Story