சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Nov 2021 1:36 AM IST (Updated: 27 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜீயபுரம், நவ.27-
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் கைது
சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளகாடு பகுதி கள்ள மேட்டைசேர்ந்தவர் விவேக் (வயது 26). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டாராம்.
இதுகுறித்து மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறையை சேர்ந்த கவுரி என்பவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.
பெண் மாயம்
*முசிறி திருவெள்ளரை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் சந்தியாராதா (19). நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற இவர்  வீடு திரும்பவில்லை. ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாராதாவை தேடி வருகின்றனர்.
* திருச்சி திருவானைக்கோவில் மொட்டை கோபுரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (39). இவர் ராமலிங்கநகர் பகுதியில் உள்ள சாலமன்ராஜா என்பவருக்கு சொந்தமான கேட்டரிங் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாலமன்ராஜாவின் மனைவி எஸ்தர் (63) மற்றும் ரமேஷ்குமாரின் மனைவி அனிதாரக்சன் (30) ஆகியோர் கவிதாவை தாக்கியுள்ளனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு அந்த எஸ்தர், அனிதாரக்சன் ஆகியோரை கைது செய்தனர்.
முதியவர் பலி
*முசிறி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்
ரங்கராஜ் (வயது 60). நேற்று முன்தினம் இரவு இவர் பெட்டவாய்த்தலை பழங்காவிரியிலிருந்து பெட்டவாய்த்தலை கடைவீதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பழங்காவேரி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (19) இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்தார்.. இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் இரு வீட்டு பெற்றோரும் பேசி கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி பிரசவத்திற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு 17 வயதே ஆனது தெரியவந்ததால் இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமார் மீதும் மற்றும் அவரது தந்தை முருகேசன், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சாலை மறியல்
*மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் ஆட்டோ நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த கோரி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதேபோல் புத்தாநத்தத்தை அடுத்த பூனைகல்பட்டியில் சாலை வசதி கோரி அந்த பகுதி மக்கள் நேற்று மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் வடக்கு இடையப்பட்டி யில்  மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

Next Story