மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ திரும்ப பெற வேண்டும். 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் மூலம் திரும்ப பெற வேண்டும். திருத்தப்பட்ட தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. நட்சினார்க்கினியன் தலைமை தாங்கினார். கருப்பசாமி, சி.ஐடி.யு. கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணன், மயிலேறும் பெருமாள், இசக்கி பாண்டி, சிவகுமார், வண்ணமுத்து, மாதவன், கார்த்திகேயன், பீர்முகமது ஷா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story