தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை


தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
x
தினத்தந்தி 27 Nov 2021 1:53 AM IST (Updated: 27 Nov 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

துறையூர், நவ.27-
துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 52). இவர் தனியார் நிறுவன ஊழியரான அதே ஊரை சேர்ந்த நரசிம்மன் (45) என்பவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4,50,000 வீடு கட்டுவதற்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு நரசிம்மன் காசோலை வழங்கியதாக கூறப்படுகிறது. காசோலை மூலமாக பணம் பெற முடியாததால் அசோகன் கடந்த 2018-ம் ஆண்டு துறையூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நரசிம்மனுக்கு 6 மாத சிறை  தண்டனை விதிக்கப்பட்டது.

Next Story