கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; 22 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; 22 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2021 2:05 AM IST (Updated: 27 Nov 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

கடை வாடகையை குறைக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
கடை வாடகையை குறைக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

காத்திருப்பு போராட்டம்

பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பாக மாநகராட்சிக்கும், வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. அங்குள்ள கடைகளுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வாடகை மற்றும் முன்வைப்புத்தொகையை மறுபரிசீலனை செய்து குறைக்க வலியுறுத்தி, பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் ஏற்கனவே மனு அளித்து போராட்டம் நடத்தினர். பின்னர் நடைபெற்ற ஏலத்தில் 2 கடைகள் மட்டும் ஏலம் விடப்பட்டது.
இந்த நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக வாசலில் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சாலமோன் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் அசோகன், செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் ஷேக் முகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பஸ் நிலைய கடை வாடகை, முன்பணத்தை குறைக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதையொட்டி, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தற்காலிக கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன.

22 பேர் கைது

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு போராட்டத்தை தொடரப்போவதாக வியாபாரிகள் அறிவித்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இதற்கு அனுமதி அளிக்க மறுத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர இருந்த 5 பெண்கள் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.

கலெக்டரிடம் மனு

கங்கைகொண்டான் சிப்காட்டிற்கு நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, கங்கைகொண்டான் பிராஞ்சேரி பகுதி விவசாயிகள் நேற்று குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு வழங்கினர்.
அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 2 பேரை முக கவசம் அணிந்து வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து முக கவசம் அணிந்து வந்தவர்களிடம் மனுவை பெற்று கொண்டார்.

Next Story