மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பாளையங்கோட்டையில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு காந்தி பூங்கா அருகில் குடியிருந்து வரும் பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து பாளையங்கோட்டை சமாதானபுரம் துணை மின்நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் உதவிப் பொறியாளர் வீரபுத்திரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், "கோட்டூர் ரோடு காந்தி பூங்கா அருகே பாளையங்கால்வாயையொட்டி மின்மாற்றி உள்ளது. இதன் மூலமாக கோட்டூர்ரோடு, பெரியபாளையம், பார்வதிஅம்மன் கோவில் தெரு, திருநாவுக்கரசு நாயனார்தெரு, திருஞானசம்பந்தர் நாயனார்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின் மாற்றி பொருத்தப்பட்டுள்ள கான்கிரீட் கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே புதிய கம்பங்கள் நட்டு மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story