அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி சாவு; கொலை வழக்காக மாற்றம்


அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி சாவு; கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 27 Nov 2021 2:47 AM IST (Updated: 27 Nov 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

சுரண்டை:
சுரண்டை அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார். இதையடுத்து வாலிபர் மீதான கொலைமுயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணியை அடுத்த அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 33). கூலி தொழிலாளி.
ஆலங்குளம் அருகே கிடாரக்குளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கோபால் (23). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அச்சம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு கோபால் புறப்பட்டு சென்றார்.

சரமாரி அரிவாள் வெட்டு

அப்போது அங்கு வந்த கருப்பசாமிக்கும், கோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கோபால் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

Next Story