ஜீவனாம்சம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் 2-வது மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற ஊர்க்காவல் படை வீரர்


ஜீவனாம்சம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் 2-வது மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற ஊர்க்காவல் படை வீரர்
x
தினத்தந்தி 27 Nov 2021 2:59 AM IST (Updated: 27 Nov 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஜீவனாம்சம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய 2-வது மனைவியை கழுத்தை அறுத்து ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் படுகொலை செய்தார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்பள்ளாப்பூர்:

இரண்டாவது திருமணம்

  சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா அந்தரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஊர்க்காவல் படை வீரர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், சுரேஷ் பட்ரேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த உஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். 2 மனைவிகளுக்கும் தலா ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சுரேஷ் மற்றும் உஷா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

  இதனால், இருவரும் போலீஸ் நிலையம் வரை சென்று பஞ்சாயத்து நடத்தி சமாதானம் செய்து வந்தனர். ஆனால், இருவரும் சமாதானம் அடையவில்லை.

வக்கீல் நோட்டீஸ்

  இந்த நிலையில், சுரேசை பிரிந்த உஷா தனது சொந்த ஊரான பட்ரேனஹள்ளிக்கு சென்று அங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும், தான் குழந்தையுடன் பிரிந்து வாழ்வதால் தனக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி சுரேசுக்கு, உஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். வக்கீல் நோட்டீசை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மனைவி பிள்ளையை பார்ப்பது போல் நடித்து உஷாவை தேடி அவரது சொந்த ஊரான பட்ரேனஹள்ளி கிராமத்திற்கு சென்றார்.

  அப்போது உஷா வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உஷாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வலைவீச்சு

  இச்சம்பவம் குறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேசை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story