ஓசூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
ஓசூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பேரவை செயலாளர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், நிர்வாகி ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூர்த்தி, ரவிச்சந்திரன், பார்த்திபன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 3 வேளாண் சட்டங்களை, நாடாளுமன்றத்தின் மூலம் திரும்பப்பெற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story