தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2021 10:07 AM IST (Updated: 27 Nov 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சண்முகராஜா மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள்  மோகன், முருகன், அர்ஜுனன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 
பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியை ஆண்டுக்கு 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
 நீதி விசாரணை
கட்டுமான தொழிலாளர் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். பெகாசஸ் உளவு பிரச்சினை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்த கூடாது. விவசாயிகளை பாதிக்கும் புதிய மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story