தாம்பரம் ரெயில்வே பணிமனையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது


தாம்பரம் ரெயில்வே பணிமனையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது
x
தினத்தந்தி 27 Nov 2021 11:53 AM IST (Updated: 27 Nov 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் ரெயில்வே பணிமனையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயில்வே ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.

தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3-வது ரெயில் முனையம் உள்ளது. இதனால் அங்குள்ள பணிமனையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களை பராமரித்து அனுப்புவது வழக்கம். அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை பராமரிப்பு செய்திட மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்கும் என்ஜின் மூலமாக குறைந்த வேகத்தில் பணிமனை பகுதிக்கு பின்புறமாக அழுத்த முற்பட்டனர்.

அப்போது பிரேக் பிடிக்காமல் போனதால் அந்தியோதையா ரெயில் பெட்டிகள் மீது என்ஜின் மோதியது. இதில் ரெயில் என்ஜினில் இருந்து 3-வது பெட்டியின் சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த விபத்தில் ரெயில்வே ஊழியரான பிரபு என்பவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், விபத்தில் காயம் அடைந்த பிரபுவை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கீழே இறங்கிய ரெயில் பெட்டி சக்கரங்களை சிறப்பு ஹைட்ராலிக் ஜாக்கிகள் மூலம் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர்.


Next Story