சட்டக்கல்லூரி மாணவர் பலி


சட்டக்கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 27 Nov 2021 6:45 PM IST (Updated: 27 Nov 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலியானார்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவனாண்டி. அவருடைய மகன் அபிஷேக் (வயது 21). இவர், சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அபிஷேக் நேற்று முன்தினம் இரவு சின்னமனூரில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில், சினிமா தியேட்டர் அருகே சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அபிஷேக் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அபிஷேக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story