திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2021 9:10 PM IST (Updated: 27 Nov 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல்:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க இணை செயலாளர் விஜூ கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது அலி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பெருமாள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 3 வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப்பூர்வமாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story