தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் விரிசல்
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் சிதம்பரநகர் பாலத்தின் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக அந்த பாலத்தின் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது. இதை சரிசெய்யாமல் சென்றதன் காரணமாக சாலையின் கீழ் உள்ள மண் அனைத்தும் அரித்து செல்லப்பட்டு சாலையின் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மாரிமுத்து, சிதம்பரநகர்.
சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
பாளையங்கோட்டை சாந்திநகர் 30-வது குறுக்குத்தெருவில் உள்ள மாநகராட்சி தண்ணீர் திறக்கும் தொட்டியை சுற்றிலும் சிமெண்டு சுவர் கட்டப்படாமல் பாதுகாப்பின்றி உள்ளது. இதனால் மழை நேரங்களில் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி தடம் தெரியாமல் முதியவர்கள், பொதுமக்கள் விழும் நிலையில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விழுந்து காயம் ஏற்படும் அவலும் உள்ளது. எனவே, இந்த தொட்டியை சுற்றிலும் சிமெண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கண்ணன், சாந்திநகர்.
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
முக்கூடல் நேரு புதுக்காலனி 14-வது வார்டு பகுதியில் குடியிருப்புகளை சமீபத்தில் பெய்த மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை உடனடியாக வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுககுமார், முக்கூடல்.
ஆபத்தான மின்கம்பம்
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கீழுர் தேரடி தெரு துரைச்சாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழை நேரம் என்பதால் அந்த பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முருகன், சாம்பவர் வடகரை.
வேகத்தடை அமைக்க வேண்டும்
ஊத்துமலை வடக்கு பிள்ளையார்கோவில் நான்கு ேராடு சந்திப்பு பகுதியில் எங்கும் வேகத்தடை இல்லை. இந்த நான்கு புறமும் தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம், ஆஸ்பத்திரி, பஸ் நிறுத்தம், கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் போகும் வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
முருகன், ஊத்துமலை.
சாலையின் நடுவே மின்கம்பம்
ஆவுடையானூர் அருகே மாயனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் அங்கு எந்த வாகனமும் வந்து திரும்புவதற்கும், ஆம்புலன்ஸ்கள் திரும்புவதற்கும் மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றி வேறு இடத்திற்கு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வேல்முருகன், பாவூர்சத்திரம்.
குண்டும், குழியுமான சாலை
கீழக்கடையம் ரெயில்வே கேட்டில் இருந்து கேளையாபிள்ளையூர் செல்லும் சாலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், ெபாதுமக்கள் சென்று வருகிறார்கள். இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜா, கீழக்கடையம்.
தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எஸ்.கைலாசபுரத்தில் இருந்து உமரிக்கோட்டை வழியாக செல்லும் சாலையானது 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லைக்கு சென்றுவர இணைப்பு சாலையாக உள்ளது. அதில் எஸ்.கைலாசபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொைலவில் உப்பாற்று ஓடை தரைப்பாலம் உள்ளது. மழை காலங்களில் இந்த பாலத்தை கடக்க முடியாத அளவுக்கு தண்ணீர் செல்லும். எஸ்.கைலாசபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் உப்பாற்று ஓடை பாலத்தை கடந்து தான் மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். தற்போது பெய்த மழையால் உப்பாற்று ஓடை தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியது. மேலும் பாலம் மிகவும் சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்கவும், அங்கு மேல்மட்ட பாலம் கட்டவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தங்ககுமார், எஸ்.கைலாசபுரம்.
Related Tags :
Next Story