வில்லியனூர் அருகே மழை நிவாரணம் கேட்டு சாலைமறியல்
வில்லியனூர் அருகே மழை நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனூர், நவ.
வில்லியனூர் அருகே மழை நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மழை நிவாரணம்
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் தடுப்பணைகள், ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என புதுவை அரசு கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் அந்த தொகை இன்னும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.
சாலைமறியல்
அரசு அறிவித்தபடி மழை நிவாரண தொகையை உடனடியாக வழங்கவேண்டும், இலவசமாக அரிசி மற்றும் தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க்கரையை உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பேட்டை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கொட்டும் மழையில் வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story