‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 27 Nov 2021 5:24 PM GMT (Updated: 27 Nov 2021 5:24 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:- 
 
குண்டும், குழியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள முத்தலீப் நகரில் பொதுமக்கள் வசதிக்காக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முத்தலீப்நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், முத்தலீப்நகர்.

அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த ஒளிமதி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கதொட்டி தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் கசிந்து வெளியேறி வீணாகிறது. மேலும், நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இருக்கும் பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். அபாய நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இளவரசன், திருவாரூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூர் பகுதியில் உள்ள மணி நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணி நகரில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பரசலூர்.

ஆபத்தான மின்கம்பம்

திருவாரூா் மாவட்டம் மன்னார்குடி காத்தாயம்மன் கோவில் தெரு மற்றும் மேலவடம்போக்கி தெருவில் உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், இந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதிகளை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மன்னார்குடி.

பழுதடைந்த சாலையால் மக்கள் அவதி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதி திருமாளம் கோவிந்தபிள்ளை தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-முருகையன், தலைஞாயிறு.


Next Story