கொட்டகை இடிந்து 7 ஆடுகள் பலி
நெமிலி அருகே கொட்டகை இடிந்து 7 ஆடுகள் இறந்தன.
நெமிலி
நெமிலி அருகே கொட்டகை இடிந்து 7 ஆடுகள் இறந்தன.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சம்பத்ராயன்பேட்டை புது தெருவை சேர்ந்த கண்ணப்பரெட்டியின் மகன் மார்கபந்து. விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
ஆடுகளை கட்டி வைக்க வீட்டிற்கு அருகில் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கொட்டகை வலுவிழந்து காணப்பட்டது. நேற்றும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் ஆட்டு கொட்டகை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பிறந்து 7 நாட்களே ஆன 1 குட்டி உள்பட 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி தலைவர் ஜோதி, துணை தலைவர் கங்கா மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோர் அங்கு சென்று கொட்டகை இடிந்து ஆடுகள் இறந்து கிடந்ததை பார்வையிட்டனர்.
கரியாகுடல் அரசு கால்நடை மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து நெமிலி தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளது. 7 ஆடுகள் இறந்ததால் அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் மார்கபந்துவின் குடும்பத்துக்கு இழப்பு ஏழுற்பட்டுள்ளது.
எனவே மார்கபந்துவுக்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story