எருமப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது


எருமப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2021 11:12 PM IST (Updated: 27 Nov 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி நரிபானி தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய 2-வது மனைவி லதா. இவருக்கும், கருப்பண்ணனின் முதல் மனைவியின் மருமகனான அலங்காநத்தம் இலுப்பைமரம் தோட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 42) என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில் லதா பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வசந்தகுமாருக்கும், லதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், லதாவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் லதா நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வசந்தகுமாரை கைது செய்தனர்.

Next Story