விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இருசக்கர வாகன ஊர்வலம்


விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இருசக்கர வாகன ஊர்வலம்
x
தினத்தந்தி 27 Nov 2021 11:15 PM IST (Updated: 27 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரின் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம் அருகில் ரவுண்டானா எதிரில் நிறைவடைந்தது. 

தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாநில பேரவை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில், வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தில் ரத்து செய்ய வேண்டும். 

இலவச மின்சாரத்தை மறுக்கும் மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். போராடும் விவசாயிகள் மீது பதிந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முத்தையன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story