மீன்வளர்ப்பிற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தியதாக புகார்


மீன்வளர்ப்பிற்காக  பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தியதாக புகார்
x
தினத்தந்தி 27 Nov 2021 5:57 PM GMT (Updated: 27 Nov 2021 5:57 PM GMT)

பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தியதாக புகார் செய்யப்பட்டது.

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவிலிலிருந்து நாகுடி செல்லும் சாலையில் பிரிந்து நெட்டியேந்தல் கிராமத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. அந்த சாலை கீழச்சேரி வழியாக துரையரசபுரம் வரை செல்கிறது. தார்ச்சாலை நீண்ட நாட்களுக்கு முன்பு போடப்பட்டது. குருவாவெட்டி கண்மாய் குறுக்கே தார்சாலை செல்கிறது. அந்த சாலையை பனையவயல் கிராமத்தை சேர்ந்த சிலர் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் பொக்லைன் எந்திரத்தை வைத்து சாலையின் குறுக்கே வெட்டியதாக நெட்டியேந்தல் கிராம மக்கள் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஆவுடையார்கோவில் போலீசாரிடமும் மனு அளித்தனர். இந்த சாலை உடைக்கப்பட்டதால் பள்ளத்தில் தண்ணீர் செல்வதால் அந்த சாலைவழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் நெட்டியேந்தல் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஆவுடையார்கோவிலுக்கு வருவதென்றால் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 கிலோ மீட்டர் சுற்றிதான் வரவேண்டி சூழ்நிலையில் உள்ளது. உடைக்கப்பட்ட சாலையை ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றிய பொறியாளர் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். அவர்களிடம் நெட்டியந்தல் கிராமத்தார்கள் இந்த சாலையை  உடனடியாக சாலையை செப்பனிட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story