வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2021 11:35 PM IST (Updated: 27 Nov 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மோட்டார் சைக்கிளில் சென்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலாம்பட்டரை, ஏழரை தோப்பு உள்ளிட்ட பகுதிகள் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்டது.

இந்த கிராமங்களை இணைக்கும் பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நத்தமேடு பகுதியில் இருந்து ஆலாம்பட்டரை கிராமத்திற்கு தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது நத்தமேடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் வழியே நடந்து சென்று அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலாம்பட்டரை மற்றும் பகுதிகளுக்கு 32 கண் ெரயில்வே மேம்பாலம் பகுதிகளில் வெள்ள நீர் செல்லும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மேலும் அப்பகுதிகளில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களை பார்வையிட்டார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் தனஞ்செயன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன், தாசில்தார் லலிதா, ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுஜாதாராஜ்குமார், சூர்யாமோகன்குமார், சுஜாணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story