ஒப்பிலான்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது
மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஒப்பிலான்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
சிங்கம்புணரி,
மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஒப்பிலான்பட்டி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
தொடர்மழை
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு மாம்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள ஒப்பிலான்பட்டியில் தொடர்மழையால் மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டது.
தடை
மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் நெடுஞ்சாலை துறையினரால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. மாற்று வழியில் செல்ல காவல்துறை மூலம் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல வெள்ளப்பெருக்கினால் கலுங்குபட்டி பகுதியில் உள்ள அணைக்கட்டுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் முரளி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெய் ஆகியோர் ஆய்வு செய்து பொது மக்கள் அணைக்கட்டில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story