8 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு ரூ.44½ கோடி பயிர்க்கடன்


8 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு ரூ.44½ கோடி பயிர்க்கடன்
x
தினத்தந்தி 28 Nov 2021 12:32 AM IST (Updated: 28 Nov 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு ரூ.44.55 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு ரூ.44.55 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
உரம் இருப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தஆண்டு இதுவரை 922.65 மி.மீ.மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 208.41 மி.மீ. கூடுதலாகும். மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப் பட்டு உள்ளது. விவசாயத்திற்கு ேதவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, தேவைக்கேற்ப உரங்கள் வரவழைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 2020-2021-ம் ஆண்டில் மாவட் டத்தில் 5 ஆயிரத்து 206 விவசாயிகளுக்கு ரூ.2.42 கோடி பயிர் காப்பீடு இழப்பீடாக அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கிடும் வகையில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இலக்கு நிர்ணயம்
இந்த ஆண்டு கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.150 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கூட்டுறவுத்துறையின் மூலம் இதுவரை 6 ஆயிரத்து 426 விவசாயிகளுக்கு ரூ.34.44 கோடி அளவிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 2 ஆயிரத்து 364 விவசாயிகளுக்கு ரூ.10.11 கோடி என மொத்தம் 8 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு ரூ.44.55 கோடி மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Next Story