மாணவர்கள் நூதன போராட்டம்
மாணவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரி சாலையில் இருந்து பாகனேரி வழியாக நல்லூர் செல்லும் சாலை வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை முன்அறிவிப்பு இன்றி சாலை சீரமைக்கும்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் கடும்அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் பொதுமக்களுடன் இணைந்து தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story